கல்லூரி கலாட்டா

மதிய உணவு இடைவேளையின் போது, இரண்டாம் ஆண்டு உமா, மூன்று ரோஜாக்களையும் தேடி வந்தாள்.

“ரம்யா, அடுத்த வாரம் ‘ தாங்கியூ பார்டி’ ய ஃபர்ஸ்ட் இயர்ஸ் ஹோஸ்ட் பண்றது பத்தி உன்கிட்ட பேசனுமாம், அதனால ஃபைனல் இயர் ரமேஷ் உன்ன இன்னிக்கு ஈவினிங் நாலு மணிக்கு கம்பியூட்டர் லேபுக்கு வர சொன்னாங்க” என்று அதிகார தோனியில் சொல்லிவிட்டு சென்றாள்.

“என்னடி இது வம்பாயிருக்கு, இவங்களா ஒரு ‘வெல்கம் பார்ட்டி ‘ கொடுப்பாங்களாம், அப்புறம் நாம இவனுங்களுக்கு ‘ தாங்கியூ பார்ட்டி’ தரணுமாம், யாரு கேட்டா இவனுங்ககிட்ட எங்களையெல்லாம் ‘வெல்கம்’ பண்ணுங்கன்னு, வேற வேலையே இல்லையா” என்று எரிச்சல் அடைந்தாள் ரம்யா.

” அது வேற ஒன்னுமில்ல ரம்ஸ், நேத்து வெல்கம் பார்ட்டில நீ அப்பிரானியாட்டம் பவ்யிமா ஆ
க்ட்விட்டியா , அது நடிப்புனு தெரியாமல் பாவம் பையன் உன்னை ‘தாங்கியூ’ பார்ட்டி ஆர்கனைஸ் பண்ண சொல்லப்போறான் போலிருக்கு, என்ன சொன்னாலும் மண்டைய மண்டைய ஆட்டிடு நீ செய்வ , நல்ல புள்ளைன்னு தப்பு கணக்கு போட்டுடானோ??” என்று கலாய்த்தாள் ஷீத்தல்.

” சரி, ‘ கோகுலத்து கண்ணனை’ சாயந்திரம் மூனு பேருமா சேர்ந்து போய் பார்த்திடுவோம் , நாம எங்க, என்னைக்கு தனியா போயிருக்கிறோம் ” என்றாள் பவானி.

சாயந்திரம் 4 மணிக்கு மூவரும் மெதுவாக கம்பியூட்டர் லேபிற்குச் சென்றார்கள். அங்கு நாலு ஐந்து பேர் ஆளுக்கு ஒரு கம்பியூட்டரில் மானிடரை முறைத்து பார்த்துக் கொண்டிருந்தார்கள். கடைசி வரிசையில் ஒரு ஓரத்து கம்பியூட்டரில் ரமேஷ் இருப்பதை கண்டு மூவரும் அங்கு சென்றனர்.

மூவரும் அருகில் வந்ததும் நிமிர்ந்துப் பார்த்த ரமேஷ்” உங்க மூனு பேரோட பெயரும் ரம்யாவா?? நான் ரம்யாவை மட்டும் தானே வர சொன்னேன், அதென்ன தொடுக்கு புடிச்சுக்கிட்டு கூட நீங்க ரெண்டு பேரும்?” என்று கடு கடுப்புடன் கூற, ஷீத்தலும் , பவானியும் ரம்யாவிற்க்கு கண்ணசைத்து விட்டு ரோஷத்துடன் வெளியேறினார்கள்.

அவர்கள் இருவரும் சென்று வெகு நேரம் ஆகியும் ரமேஷ் கம்பியூட்டரில் தான் செய்துக் கொண்டிருந்த வேலையை தொடர்ந்துக் கொண்டிருந்தான்.

‘வரச்சொல்லிட்டு, இவன் பாட்டுக்கு கம்பியூட்டர்ல ஏதோ டைப் பண்ணிட்டே இருக்கிறான்’ என்று எரிச்சலடைந்த ரம்யா, தொண்டையை செறுமினாள் , தான் காத்திருப்பதை அவனுக்கு உணர்த்த.

நிமிர்ந்து என்ன என்பது போல் பார்த்தான் ரமேஷ்,
” நான்………..வந்து……….ரொம்ப…….நேரமா……”என்று அவள் கூறி முடிக்கும் முன்
” கொஞ்ச நேரம் வெயிட் பண்ணினா ஒன்னும் தப்பில்ல, வெயிட் பண்ணு’ என்று கூறி விட்டு தன் வேலையை தொடர்ந்தான்.

ஆத்திரமும் கோபமும் முட்டி கொண்டு வந்தது ரம்யாவிற்கு, அதனை வெளிகாட்டாமல் முகபாவத்தை வழக்கம் போல் மெயின்டேன் பண்ணினாள்.

‘ கோகுலத்து கண்ணனுக்கு என்னாச்சு இன்னிக்கு , நேத்து கல கலன்னு பேசிட்டு கடலை போட்டுட்டு இருந்தான் செமினார் ஹால்ல, இன்னைக்கு ஏன் இஞ்சி தின்ன குரங்காட்டம் மூஞ்சி வைச்சிருக்கான், ஒரு வேளை ராதைகள் சுற்றி சூள குழுமியிருந்தா தான் நார்மலா இருப்பானோ??’ என யோசித்துக் கொண்டிருந்தாள் ரம்யா.

கம்பியூட்டர் லேபிலிருந்து அனைவரும் சென்று விட்டனர் என்று உர்ஜிதம் செய்தபின், மெதுவாக தன் இருக்கையிலிருந்து எழுந்தான் ரமேஷ்.

” அடுத்த வாரம் , ஃபர்ஸ்ட் இயர்ஸ் சீனியர்களுக்கு ‘ தாங்கியூ பார்ட்டி’ கொடுக்கனும், இது நம்ம டிபார்ட்மெண்ட் வழக்கம், ஸோ அதை நீ தான் ஆர்கனைஸ் பண்ண போற” என்றான் ரம்யாவிடம்.

” என்……….னது………….நா……………னா…………..,அது…….வந்து……..” என்று ரம்யா இழுக்க,

” ஏய், நிறுத்து, அதென்ன வடக்கத்து நடிகை தமிழ்ல பேட்டி கொடுக்கிறாப்ல, தமிழ்ல இந்த இழு இழுக்கிற, தமிழும் சரியா தெரியாதா உனக்கு??” என்றான் ரமேஷ்.

” இல்ல, தமிழ் ..எனக்கு……நல்லா …..தெரியும்” என திக்கி தினறி கூறி முடித்தாள் .

” அப்போ , இங்கிலீஷ் கத்துக்க தான் ‘ ரெபிடெக்ஸ்’ வேணுமாக்கும்” என்றான் டக்கென்று.

” என்னது…………..” திகைத்துப் போனாள் ரம்யா.
ரமேஷின் முகதிலிருந்த அசட்டு சிரிப்பு அவளுக்கு வெளிச்சம் போட்டு காட்டியது , அவள் பேசியது அனைத்தையும் இவன் தெரிந்துக் கொண்டுவிட்டான் என்று.

இனிமேலும் இவன் கிட்ட அப்பிரானி வேஷம் போட்டா வேலைக்கு ஆகாது என்று முடிவு பண்ணி, முகத்தில் உண்மையான கோபத்துடன் ரமேஷை முறைத்தாள்.

” என்ன முறைக்கிற, எவ்வளவு கொழுப்பிருந்தா என்னையே லூசுன்னு சொல்லுவ நீ” என்று கத்தினான் ரமேஷ்.

” சே, இன்டீசன்ட் ஃபெல்லோ, இப்படி ஒட்டுக் கேட்டுட்டு, அதை பற்றி கேட்க தான் தனியா கூப்பிடீங்களா, அசிங்கமாயில்ல” என்று ரம்யா குரலை உயர்த்தினாள்.

” ஏய், என்ன குரல் கொடுக்கிற, அடிச்சேனா பல்லு கில்லு எல்லாம் பேர்ந்திடும், ஜாக்கிரதை” என்று பதிலுக்கு அவனும் கத்தினான்.

“ஹலோ, உங்க ஆஃபிஷியல் ராகிங் கூட நேத்தே முடிஞ்சுப் போச்சு, இப்போ ரொம்ப கத்தினீங்க, ராகிங் பண்ணினீங்கன்னு ரிபோர்ட் பண்ணிடுவேன், என்ன தண்டனை கிடைக்கும் ராகிங் பண்ணினான்னு தெரியும் இல்ல” என்று எரிமலையாக வெடித்தாள் ரம்யா.

” இந்த பூச்சாண்டி வேலைக்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன்டி” என்று அவனும் பதிலுக்கு கத்தினான்.

” என்னது ‘ டி’ போட்டு பேசுறீங்க, கண்டிப்பா உங்களை நான் ரிப்போர்ட் பண்ணத்தான் போறேன், சும்மா ராகிங்ன்னு மட்டும் சொல்ல மாட்டேன், கம்பியூட்டர் லேபிற்க்கு தனியா வர சொல்லி, என் கை பிடிச்சு இழுத்தான், கால் பிடிச்சு இழுத்தான்னு ரிப்போர்ட் பண்ணுவேன் பாரு” என்று தெளிவான முடிவோடு கூறினாள்.

” அடச்சீ, வெட்கமா இல்ல உனக்கு இப்படி சொல்ல, நீ இப்படி ரிப்போர்ட் பண்ணினா உனக்குத் தான்டி அசிங்கம்” என்றான் ரமேஷ்,

” அதைபத்தி எல்லாம் எனக்கு கவலையில்ல , நீ பொறுக்கின்னு ஊருக்கு தெரிஞ்சிடும், அது போதும்” என்றாள் ரம்யா முகத்தை திருப்பி கொண்டு.

‘ பொறுக்கி’ என்ற வார்த்தையை கேட்டதும் கோபத்தின் உச்சிக்கே சென்றுவிட்டான் ரமேஷ்.
” என்ன என்னன்னு சொன்ன………..” என்று ரமேஷ் ஆக்ரோஷமாக கேட்க

அவனை நேருக்கு நேராக பார்த்து
” பொறுக்கி” என சத்தமாக கூறினாள் ரம்யா.

பளார் என ஒரு அரைவிட்டான் ரமேஷ், ” அம்மா” என்று அலறிய ரம்யா…………….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *