பள்ளிக் கல்வியில் கவனம் செலுத்துமா தமிழக அரசு:::

பள்ளிக் கல்வியில் கவனம் செலுத்துமா தமிழக அரசு:::

ஒன்றிய அரசு 2020 ல் இருந்து மாநிலம் முழுவதும் செயல்படுத்த துடிக்கும் “தேசிய கல்விக் கொள்கை” யை தமிழக அரசு நிராகரிக்க வேண்டும்..

“தேசிய கல்விக்கொள்கை” யானது மாநில உரிமைக்கும்,கூட்டாட்சி முறைக்கும் எதிரானது..

கல்வி பொதுப்பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்கு மாற்றப்பட்டால் மட்டுமே இது சாத்தியமாகும்..

அரசுப் பள்ளிகளின் தரங்கள் மேம்படுத்தப்படுவது மிக அவசியமான ஒன்றாகும்..எளிய மக்களுக்கான பள்ளிகளே அரசுப்பள்ளிகள்..

பெரும்பாலான தமிழகத்தில் இயங்கி வரும் அரசுப் பள்ளிகள் நிர்வாகத்திலும்,ஆசிரியர் நியமனத்திலும்,உள்கட்டமைப்பிலும் தரம் குறைந்தே இன்று வரை காணப்படுகிறது..

டெல்லி,கேரள மாநிலங்கள் பல சிறப்பான திட்டங்களை வகுத்து அரசுப் பள்ளிகளின் தரம் மக்கள் மனதை கவலையுற செய்யாமல் வைத்திருக்கின்றன..

எனவே எந்த சமரசரத்திற்கும் இடம் கொடாமல் பள்ளி கல்வியில் கவனம் செலுத்த தமிழக அரசு முன் வருதல் அவசியம்…