மனித உரிமை மீறலை தைரியமாக வெளிக்கொண்டு வந்த மேகாராஜகோபாலன்

1.மேகா ராஜகோபாலன் அமெரிக்க இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்..இவர் பஸ்ஃபீட் நிறுவனத்தில் ஊடகவியலாளராகவும் வெளிநாடுகளில் செய்தி சேகரிப்பாளராகவும் பணி புரிந்து வருகிறார்..

2.சீன நாட்டின் சிஞ்சியாங் மாகாணத்தில் முகாம்களில் கைதிகளாக இருந்த இரண்டு டஜன் உய்குர் இசுலாமிய பழங்குடியினரை சந்தித்து அவர்களின் கொடுமைகளை கேட்டறிந்தார்..

3.அவர்களிடம் அதிக வேலை வாங்கப்படுவதாகவும் குழந்தைகளை பறித்துக்கொண்டு சீன வழிக்கல்வியை புகுத்துவதாகவும் தங்களது மத வழிபாட்டுமுறையை தடுப்பதாகவும் கேட்டு வேதனையுற்றார்..

4.தனது கட்டுரைகளில் இதை எழுதி வந்த அவர் அதற்கு ஆதாரமாக அலிசன் கில்லிங்,கிறிஸ்டோ புஷெக் இவர்களின் உதவியோடு தடுப்புமுகாம்களின் செயற்கை கோள் புகைப்படத்தை வெளியிட்டார்.

5.இதன்விளைவாக ஐக்கிய நாடுகள் இது குறித்து சீனாவிடம் விளக்கம் கேட்டது…ஐரோப்பா,ஐக்கிய அமெரிக்க நாடுகள் கடும் எதிர்ப்பை தெரிவித்தன..

6.இந்த மனித உரிமை மீறலை தைரியமாக வெளிக்கொண்டு வந்த மேகாராஜகோபாலனை பாராட்டி இவருக்கு இரண்டு பங்களிப்பாளர்களுடன் 2021 ஆம் ஆண்டின் புலிட்சர் விருது வழங்கப்பட்டது..

7.புலிட்சர் விருது என்பது ஊடகவியல், இணைய ஊடகவியல்,இலக்கியம்,இசையமைப்பு போன்ற துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு ஜோசப்புலிட்சர் என்பவர் பெயரால் கடந்த 1917 ஆம் ஆண்டு முதல் நியூயார்க்கில் உள்ள கொலம்பியா பல்கழைக்கழகத்தால் வழங்கப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *