அதிக காரமாக சாப்பிட்டால் மூக்கு ஒழுகுவது ஏன்….

பொதுவாக அதிக காரமுள்ள உணவு வகைகளில் காப்சைசின் (capsaicin) அதிகம் உள்ளது. இதுதான் நமது மூக்கில் நீரை வர வைக்கிறது. இந்த காப்சைசினில் மனிதர்களுக்கும் பிற பாலூடிகளுக்கும் எரிச்சலூட்டும் இரசாயனங்கள் உள்ளன.

இந்த இரசாயனங்கள் கோப்லேட் செல்களை (goblet cells) தூண்டுகிறது. இந்த தூண்டலினால் மூக்கில் சளி சுரக்கிறது. இதனால்தான் அதிக காரமாக சாப்பிட்டால் மூக்கில் சளி போன்ற திரவம் வருகிறது.

அதிக காரமாக சாப்பிடுவதால் உண்டாகும் எரிச்சலை தண்ணீர் குடிப்பதால் குறைக்க முடியாது. ஏனெனில் தண்ணீரில் காப்சைசின் கரையாது. இதற்க்கு சிறந்த தீர்வு குளிர்ந்த பால். இதில் உள்ள கேசீன் (casein) என்ற புரதம் காப்சைசின் உடன் வினைபுரிந்து எரிச்சலை குறைக்கிறது.

எனவே அடுத்தமுறை காரமாக சாப்பிடுவதால் உண்டாகும் எரிச்சலை பால் குடிப்பதன் மூலம் போக்கிக்கொள்ளுங்கள்…

, , , ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *