ஒற்றைத் தலைவலி போக்கும் தும்பை

தும்பைச் செடியின் பூ,இலை,வேர் மூன்றும் மருத்துவ குணம் கொண்டவை.

பூச்சிக்கடிக்கு மருந்தாகச் செயல்படும்.

சளி,ஜலதோஷம் போன்றவற்றை குணப்படுத்தும்.

அரிப்பு,அலர்ஜி போன்றவற்றுக்குத் தீர்வு கொடுக்கும்.

குடல் புழுக்களை வெளியேற்ற உதவும்.

தும்பை இலையை மஞ்சளுடன் சேர்த்து அரைத்து பத்துப்போட அரிப்பு பிரச்சினை நீங்கும்.

தும்பை இலை மற்றும் பூவை எடுத்து தண்ணீரில் கலந்து 30 மில்லி வெறும் வயிற்றில் குடிக்க குடல் புழுக்கள் வெளியேறும்..

தும்பை இலை மற்றும் பூவை எடுத்து தண்ணீரில் நன்றாகக் கொதிக்க வைத்து ஆவி பிடித்தால் ஒற்றைத் தலைவலி குணமடையும்..

, , , , ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *