உடலில் உள்ள தேவையில்லாத உப்புக்களை வெளியேற்ற உதவும் பூனை மீசை

இந்த பூ பார்ப்பதற்கு பூனையின் மீசை போன்று இருக்கும்..இதற்கு “ராவணன் மீசை மூலிகை” என்ற இன்னொரு பெயரும் உண்டாம்..ஜாவா நாட்டில் அலங்காரச் செடியாக இது பயன்படுத்தப்படுகிறது..”ஜாவா டீ” என்பது மலேசியதேநீர் கடைகளில் இப்போதும் பிரபலமான பானம்..”குச்சிங்” என்ற பெயரில் சீன மருத்துவத்தில் பெரிதும் இந்த மூலிகை பயன்படுத்தப்படுகிறது..

சிறுநீரகக் குறைபாடு உள்ளவர்களுக்கு உடலில் உள்ள தேவையில்லாத உப்புகளை வெளியேற்றும்.

சிறுநீரகக் கற்களை கரைப்பதில் சிறந்த பலனைத் தருகிறது.

சிறுநீரகச் செயல் இழப்பு,சிறுநீர்ப்பை மற்றும் சிறுநீரகக் கோளாறுகள்,சிறுநீரகக் கற்கள்,கீல்வாதம் வாத நோய் மற்றும் அதன் விளைவாக வரும் துணை நோய்களுக்கும் சிறந்த நிவாரணம் தரும்..

நீரிழிவு மற்றும் ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் கொண்டு வருவதில் பூனை மீசை சிறப்பாக செயல்படுகிறது..

கல்லீரல் கொழுப்பை கரைத்து அதன் செயல்பாட்டை அதிகப்படுத்துகிறது..ரத்தத்தில் உள்ள அதிகப்படியான கொழுப்பை கரைக்க உதவுகிறது..

பயன்படுத்தும் வழிமுறைகள்:::

மூக்கீரட்டை கீரையுடன் சேர்த்து கசாயம் வைத்து பருகலாம்..

தினமும் பூனைமீசை இலை கிடைத்தால் தினமும் ஐந்து இலைகளை பறித்து இரண்டு மிளகுடன் சேர்த்து வெற்றிலைபோல் மென்று சாப்பிடலாம்..

, , , ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *