தமிழ்நாடு அரசு திரைப்படச் செய்தி பிரிவு உருவான பின்னணி

1967 -க்கு முன், சென்னை மாநகராட்சி தி.மு.க நிர்வாகத்தின் கீழ் வந்தபின். மேயராக திரு. மைனர் மோசஸ் இருந்தபோது, மயிலாப்பூரில் அய்யன் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டு,

அப்போதைய குடியரசுத் தலைவர் டாக்டர். எஸ். இராதாகிருஷ்ணன் அவர்களால் தமிழக முதலமைச்சர் எம். பக்தவச்சலம் அவர்களின் தலைமையில் 2.6.1966 அன்று திறக்கப்பட்டது. விழாவில் தலைவர் கலைஞர் அவர்கள் கலந்து கொண்டு பார்வையாளர் வரிசையில் அமர்ந்திருந்தார்.

அப்போது, குடியரசுத் தலைவர் கலந்து கொண்ட நிகழ்ச்சிகளை படம் பிடிப்பதற்காக சென்னைக்கு வந்திருந்த மத்திய அரசியின் தகவல் ஒளிபரப்புத் துறை குழுவினர்,

குடியரசுத் தலைவர் பங்குபெற்ற மற்ற நிகழ்ச்சிகளை எல்லாம் படம்பிடித்துவிட்டு.

மாநில அரசின் சார்பில், சென்னை மாநராட்சி ஏற்பட்டு செய்து, மாநில முதலமைச்சர் தலைமையில், குடியரசுத்தலைவர் டாக்டர். எஸ். இராதாகிருஷ்ணன் அவர்கள் பங்கேற்ற அய்யன் திருவள்ளுவர் சிலை திறப்பு நிகழ்ச்சியை மட்டும் படம் பிடிக்கவில்லை .

மத்திய செய்தி ஒளிபரப்புத் துரையின் அச்செயல், அப்போது தமிழகத்தில் அனைவரையும் வருத்தம் கொள்ளச் செய்துவிட்டது,

இது குறித்து பெரிதும் வேதனையடைந்த பேரறிஞர் அண்ணா அவர்களும், தலைவர் கலைஞர் அவர்களும் 1967 யில் கழக அரசு அமைந்த உடன், தமிழக அரசின் செய்தித் துறையின் கீழ் ஒரு திரைப்படச் செய்திப் பிரிவை புதிதாக உருவாக்கினார்கள்.

, , ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *