நுரையீரல் மருந்து ஆடாதொடை

ஆடாதொடை இலைகள் கசப்புச் சுவையுடன் இருக்கும்..இதனால் இதை ஆடுகள் உண்ணாது..”ஆடுகள் தொடா இலை” என்று அழைப்பதே சரியானது..ஆடாதொடை செடிகளை டெல்டா மாவட்ட ஆற்றங்கரை ஓரங்களில் அதிகமாக பார்க்க முடியும்..

ஆடாதொடை இலைகளில் இருக்கும் “வாஸிசைன்” எனும் வேதிப்பொருளுக்கு நுரையீரல் பாதையை விரிவடையச் செய்யும் தன்மை உண்டு..நுரையீரல் தொற்றில் இருந்து ஒருவரை மீட்க முக்கிய மருந்து இது..

கப நோய்களை நீக்குவதற்கு உதவும்..

ரத்த அழுத்தத்தைக் குறைக்கும்..

குழந்தைகளுக்கு ஏற்படும் கழிச்சல் நோயை சரிசெய்ய உதவும்..

பயன்படுத்தும் வழிமுறைகள்::

ஆடாதொடை அதிமதுரம்,சீந்தில்,ஏலம்,மிளகு ஆகியவற்றை சம அளவு எடுத்து 50 மில்லி தண்ணீரை ஊற்றி கொதிக்க விடவும்..தண்ணீர் பாதியாக வற்றிய பிறகு வடிகட்டி ஆறவைத்துக் குடிக்கவும். தினமும் 60 மில்லிவரை இந்த மூலிகை நீரை பருகி வர மூக்கில் நீர் வடிதல்,தலைபாரம்,சளி வறட்டு இருமல் குணமாகும்.

ஒரு கைப்பிடி அளவு ஆடாதொடை இலைகள்,அரை டீஸ்பூன் மிளகுத்தூள்,அரை டீஸ்பூன் கடுக்காய்த் தூள் இவற்றை தண்ணீர் விட்டு நன்றாகக் கொதிக்க வைத்து,குடிநீராக பயன்படுத்தலாம்..சுவாச நோய் உள்ளவர்களுக்கு நல்ல பலனைக் கொடுக்கும்..

3 முதல் 12 வயதுள்ள குழந்தைகளுக்கு ஒரு வேளைக்கு 10 மில்லி கிராம் கொடுக்கலாம்..12 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஒரு வேளைக்கு 15 மில்லி கிராம் எடுத்துக் கொள்ளலாம்.ஒரு நாளைக்கு இரண்டு வேளைகள் பருகலாம்..

, , , ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *